பொலிரிட்டி நிறுவனம் இந்தியாவில் புதிய எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
புனேவை சேர்ந்த பொலாரிட்டி நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை மொத்தம் ஆறு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவை ஸ்போர்ட்ஸ் மற்றும் எக்சிகியூட்டிவ் என இருவித பிரிவுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஸ்போர்ட்ஸ் பிரிவில் எஸ்1கே, எஸ்2கே மற்றும் எஸ்3கே மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இவற்றின் விலை முறையே ரூ. 38,000 இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 1.05 லட்சம் வரை இருக்கலாம். மேலும், எக்சிகியூட்டிவ் பிரிவில் இ1கே, இ2கே மற்றும் இ3கே மாடல்கள் முறையே ரூ. 40,000 இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 1.10 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. மேலும், அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களிலும் 1 – 3கிலோவாட் திறன் கொண்ட BLDC மோட்டார் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
இந்த பேட்டரிகளுக்கு மூன்று வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது. இந்த அனைத்து மாடல்களும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது . இவை குறைந்த பட்சம் மணிக்கு 40 கிலோமீட்டரில் துவங்கி டாப் எண்ட் மாடல் அதிகபட்சம் மணிக்கு 100 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இவற்றை சார்ஜிங் செய்ய 40 வோல்ட் 5ஏ யூனிட் கொண்ட ஹோம் சார்ஜிங் சாதனம் வழங்கப்டுகிறது.
இதனுடன் 80 வோல்ட் 10ஏ ஃபாஸ்ட் சார்ஜர் விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பொலிரிட்டியின் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்ட நிலையில் இவற்றின் விற்பனை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் துவங்கும் என கூறப்பட்டுள்ளது.