Categories
Tech டெக்னாலஜி

WHATSAPP-ல் புதிதாக “Polls” வசதி அறிமுகம்…. பயன்படுத்துவது எப்படி…..? இதோ முழு விபரம்….!!!!

மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் அடிக்கடி புது புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் Polls வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் தற்போது வழங்கப்பட்டுள்ளது. ‌ ஆனால் whatsapp வெர்ஷனில் வழங்கப்படவில்லை. இனி வரும் நாட்களில் whatsapp வெப் தளத்திலும் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த அம்சமானது குரூப் சாட் மற்றும் தனிநபர் சாட்களில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் Polls வசதியை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

இதை பயன்படுத்தி 12 கேள்விகள் வரை பயனர்கள் செட் செய்து கொள்ளலாம். அதன் பிறகு ஒருவர் ஒரு கேள்விக்கு ஒரு முறைக்கு மேல் பதில் அளித்தால் உடனடியாக வாட்ஸ்அப் எச்சரிக்கை செய்யும். இந்த வசதியை பெறுவதற்கு முதலில் whatsapp அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இதனையடுத்து தனிநபர் சாட் அல்லது குரூப் சாட் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து விட்டு, ஐஓஎஸ்-ல் வழக்கமாக குறுந்தகவல்களை அனுப்பும் இடத்தில் பிளஸ் ஐகானை கிளிக் செய்து விட்டு சாட் பாக்சில் உள்ள பேப்பர் கிளிப் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

இதை கிளிக் செய்தவுடன் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு என இரு தளத்திலும் மெனு ஆப்ஷன் திறக்கும். இதில் போல்ஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு அதில் கேள்வி மற்றும் பதில்களை சேர்க்க வேண்டும். நீங்கள் யாருக்கு போல் அனுப்புகிறீர்களோ அவர்களும் அதில் பதில் ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளலாம். இவர்கள் அனுப்பும் பதில்களை போல்ஸ்-ன் கீழ் பார்த்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. மேலும் இதன் மூலம் ஒவ்வொருவரும் எத்தனை கேள்விக்கு பதில் அளித்துள்ளனர், எந்த பதிலை அதிக அளவில் தேர்வு செய்துள்ளனர் போன்றவற்றை பார்த்துக் கொள்ளலாம்.

Categories

Tech |