Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

முதல் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்தது …ஹார்லி டேவிட்சன் நிறுவனம் ….

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தன்னுடைய  முதல் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளின் ப்ரொடக்‌ஷன் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது .

இந்த மோட்டார் சைக்கிள் வருகின்ற  2020 -ஆம் ஆண்டு முதல்  விற்பனைக்கும் வரும் என தெரிவித்துள்ளனர் .கடந்த ஆண்டு நடைபெற்ற EICMA  2018 மோட்டார் சைக்கிள் விழாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் சார்பில் லைவ் வையர் கான்செப்டை  அறிமுகம்  செய்தது . இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாத  விழாவிலும் இதே மாடல்  காட்சிப்படுத்தப்பட்டது. எலெக்ட்ரிக் மாடலுக்கான முன்பதிவுகள் விரைவாக துவங்கும் என ஹார்லி டேவிட்சன்  நிறுவனம் அறிவித்துள்ளது.

எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளின் க்கான பட முடிவு

H.D கனெக்ட் என்று  அழைக்கப்படும். ஸ்மார்ட் டெலிமேடிக்ஸ் சிஸ்டம் மோட்டார் சைக்கிளின் பேட்டரி சார்ஜ் விவரங்களை சேகரித்து ஹார்லியின் கனெக்ட்டெட் ஆப் மூலம்  பயனருக்கு வழங்கும் .லைவ் வையர் செல்லுலார் இணைப்பு பெற்ற முதல் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளாக விளங்கும்  என ஹார்லி டேவிட்சன்நிறுவனம் கூறுகிறது .மேலும் அதிக அளவில் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மாடல்களை உற்பத்தி செய்ய ஹார்லி டேவிட்சன் நிறுவனம்  திட்டமிட்டுள்ளது.

எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளின் க்கான பட முடிவு

புதிய எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மணிக்கு 0முதல் 100 கிலோமீட்டரை  வெறும் 3.5 நொடிகளில் கடக்கிறது .இந்த மோட்டார் சைக்கிள் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 177 கிலோமீட்டர் வரை செல்கிறதாம் . இது மட்டுமின்றி  ரைடு அசிஸ்ட், டிராக்‌ஷன் கண்ட்ரோல் போன்ற சில சிறப்பு  அம்சங்களை இந்த ஹார்லி நிறுவனத்தின் எலக்ட்ரிக் மோட்டர் சைக்கிள் கொண்டது .

Categories

Tech |