Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எப்ப நாளும் அழைக்கலாம்… பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுப்போம்… காவல்துறையினரின் தீவிர செயல்…!!

பெண்களுக்கு நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக 181 இலவச தொலைபேசி எண்ணை காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் அறிமுகப்படுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏ.கே.டி.பள்ளி கூட்ட அரங்கத்தில் காவல் துறை சார்பாக பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கும் விதத்தில் 181 இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தலைமை வகித்துள்ளார். அதன்பின் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக 181 என்ற எண்ணை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

பின்னர் அவர் பேசும் போது பெண்களுக்கு எதிரான குற்றங்களையும், அதை தடுக்கும் வழிமுறைகளையும் குறித்து விளக்கி கூறியதோடு, பெண்களுக்கான சட்ட உதவி பாதுகாப்பு, மனநல ஆலோசனைகள், மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் போன்றவற்றை திறம்பட செயல்படுத்த வேண்டும் என காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதனை அடுத்த பெண்களுக்கான உதவி மையம் எண் 181 என்கின்ற இலவச தொலைபேசி எண்ணின் பயன்களையும் கூறி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தீவிரமாக கண்காணிக்க அதில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தரப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

Categories

Tech |