பிஐயூ நிறுவனங்களின் கால் டாக்சி சேவைகள் சென்னை மற்றும் மதுரையில் நேற்று முதல் தொடங்கியது .
இந்தியாவில் பாஸ்ட்ரக், உபேர், ஓலா போன்ற கால்டாக்ஸி நிறுவனங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் புதிதாக பிஐயூ என்ற கால் டாக்சி நிறுவனமானது தொடங்கப்பட்டுள்ளது. கொச்சியைச் சேர்ந்த மைண்ட் மாஸ்டர் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட்டின் பிஐயூ கால் டாக்சி நிறுவன சேவையானது அரசு நிர்ணயித்துள்ள டாக்ஸி மற்றும் ஆட்டோ கட்டண அடிப்படையில் இருக்கும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
குறிப்பாக பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்ஓஎஸ் பொத்தான் வசதியும், ஒருவர் பயணம் செய்யும்போது பணம் ஈட்டிட உதவும் வழிவகையும் இந்த செயலியில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஓட்டுனர்களுக்கு மாதத்திற்கு 1834 ரூபாய் என்ற குறைந்த பட்சம் சந்தா அடிப்படையில் இயங்குவதாகவும் கூறியது . இதன்பின் இந்த நிறுவனத்தின் சேவையானது சென்னை மற்றும் மதுரையில் தொடங்கியுள்ளது.