Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்…. இதற்கு வட்டி கிடைக்குமா…? இதோ முழு விபரம்…!!!!

இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது டிஜிட்டல் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிஜிட்டல் ரூபாய் நோட்டுகள்  குறிப்பிட்ட சில வங்கிகளுக்கு மட்டும் தான் பயன்படுத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அந்த வங்கிகள் அரசு பத்திரங்களை வர்த்தகம் செய்வதற்கு டிஜிட்டல் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் டிசம்பர் 1-ம் தேதி முதல் சில்லறை வியாபாரிகளும் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் சாதாரண மக்களும், வர்த்தகர்களும் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இது தற்போது சோதனை அடிப்படையில் மட்டும் தான் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதன் பிறகு கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்வதன் மூலம் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் ரிசர்வ் வங்கிக்கு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் செலவு குறையும்.

அதோடு ரூபாய் நோட்டுகள் கிழிவது போன்ற பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் நிலையில் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகளில் அப்படிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் வராது. இதனையடுத்து டிஜிட்டல் ரூபாய் நோட்டுகளானது மிகவும் பாதுகாப்பான முறையில் இருக்கும். மேலும் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகளின் மூலம் வட்டி எதுவும் கிடைக்காது என்பதை ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் வங்கிகளில் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகளை சேவிங்ஸில் வைக்கும் போது வட்டி விகிதம் கிடைக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Categories

Tech |