டெல்லியில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட காரணத்தினால் பல மாநிலங்களில் இருந்து மக்கள் வாழ்வாதாரத்திற்காக டெல்லியை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் நாளுக்குநாள் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது. இதன் காரணமாக டெல்லி மாநிலத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. அதன்படி சந்தை மற்றும் வணிக வளாகங்கள் சுழற்சிமுறையில் 10 மணி முதல் இரவு 8 மணி வரை வழங்க உள்ளது. பேருந்து சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை 50% இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவன ஊழியர்களுடன் செயல்பட அனுமதித்து உள்ளது. இதனால் டெல்லிக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் படையெடுக்க தொடங்கியுள்ளனர். உத்திரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் டெல்லியை நோக்கி வருவதால் அங்கு கொரோனா தொற்றின் மூன்றாம் அலை ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மக்கள் சற்று பயத்தில் உள்ளனர்.