Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“எனது காதல் மனைவியை மீட்டு தாங்க” வாலிபர் அளித்த புகார் மனு…. போலீஸ் விசாரணை….!!

காதல் மனைவியை மீட்டுத் தரக்கோரி வாலிபர் காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகர் பகுதியில் சதீஷ்சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவர் முத்தையாபுரம் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, நான் தூத்துக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த சில வருடங்களாக நானும் கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் நவ்சின்பானு என்பவரும் காதலித்து வந்தோம். அதற்கு நவ்சின்பானு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் நவம்பர் மாதம் 8-ஆம் தேதி எனது பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளோம். அதன்பின் நாங்கள் இருவரும் முத்தையாபுரத்தில் வசித்து வந்தோம்.

இந்நிலையில் எனது மனைவியின் பெற்றோர் கடந்த மாதம் எங்க வீட்டிற்கு வந்து பழைய சம்பவங்களை மறந்து விட்டதாக கூறி நவ்சின்பானுவை அழைத்துச் சென்றுவிட்டனர். கடந்த மாதம் நான் எனது மனைவிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது அவர் என்னுடன் வர மாட்டார் என நவ்சின்பானுவின் பெற்றோர் தெரிவித்தனர். இதற்கிடையே நவ்சின்பானு எனக்கு போன் செய்து என்னை துன்புறுத்துவதாகவும், அவரை அழைத்துச் செல்லுமாறும் என்னிடம் கூறினார்.  எனவே எனது மனைவியை மீட்டு தரவேண்டும் என சதீஷ்சுடலை அந்த மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |