முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செம்மண்குடியிருப்பு பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சாமிபழம் என்பவரின் மனைவி சரஸ்வதி, மகள் வனச்செல்வி, மகன் பொன்சுடலைராஜ் ஆகியோர் ஜெகநாதனுக்கு சொந்தமான மரத்தை வெட்டியுள்ளனர். இதனை ஜெகநாதன் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஜெகநாதனை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ஜெகநாதன் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் 3பேர் மீதும் வழக்கு பதிவு செய்த சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.