திருநெல்வேலி அருகே விசாரணைக்காக அழைத்துச் சென்றதை அவமானமாக கருதி தாய் தனது மகளுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வல்லவன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருமலை முருகன். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரது மனைவி வள்ளியம்மாள். இவருக்கு மகராசி, கனகலட்சுமி என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் வள்ளியம்மாள் அதே பகுதியைச் சேர்ந்த ஆவுடை தங்கம் என்ற பெண்ணுடன் நீண்ட நாள் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இருவரும் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வார்கள். இந்நிலையில் அவருடைய ஆவுடைதங்கத்தின் வீட்டில் 6 பவுன் தங்க நகை காணாமல் போனது. இது குறித்து அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் சந்தேகத்தின் பேரில் வள்ளியம்மாள் அழைத்துச் சென்று விசாரித்து விட்டு மாலையில் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டனர் அதிகாரிகள். இதனை அவமானமாக கருதிய வள்ளியம்மாள் தனது மகள்கள் இருவருக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயன்று கடைக்குச் சென்று விஷமாகி வந்து கொடுத்துள்ளார்.
இரண்டாவது மகள் கனகலட்சுமி தட்டி விட்டு வெளியேற தாயும் முதல் மகள் மகராசியும் விஷத்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். பின் கனகலட்சுமி அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் இருவரது உயிரும் பறிபோய்விட்டது. பின் இதுகுறித்த தகவல் காவல்நிலையத்தில் தெரிவிக்கப்பட, சம்பவம் இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரது உடலையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில்,
என் கணவர் இறந்ததற்கான காப்பீட்டு தொகை ரூபாய் 4 லட்சம் கடந்த வாரம் வந்ததாகவும் அதை காரணமாக வைத்து கொண்டு நகையைத் திருடி பணமாக மாற்றி விட்டாயா என்று வல்லியம்மாளை ஆவுடை தங்கத்தின் கணவர் வீட்டின் முன் வந்து திட்டி விட்டுச் சென்றதால் ஏற்கனவே மன விரக்தி அடைந்த அவர் விசாரணையால் மேலும் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.மேலும் இது தான் காரணமா ?அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளனர்.