தமிழகத்தில் ரூ2,300 கோடி முதலீட்டில் 20,600 பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் விதமாக முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடிபழனிச்சாமி ஒப்பந்தம் செய்து கொண்டார்.
பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்கா சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அப்போது தமிழகத்தில் 2750 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ய உள்ள 16 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்த செய்துகொண்டனர். இதன் மூலம் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கை தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோ நகருக்கு முதலமைச்சர் சென்றடைந்தார். அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் வம்சாவளியினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கே நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார். அப்போது 19 நிறுவனங்கள் தமிழகத்தில் 2300 கோடி ரூபாய் முதலீடு செய்வதென ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் மேலும் 6,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.