Categories
பல்சுவை

40,000 புள்ளியை கடந்து “மீண்டும் புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ்” முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!!

மும்பை பங்குசந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 40,000 புள்ளிகளாக அதிகரித்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளர்.

பங்கு சந்தை :

பங்குச் சந்தை என்பது ஒரு பொதுச் சந்தை. இங்கு நிறுவனங்களின் பங்குகள் விலைக்கு விற்பனை செய்யப்படும். பங்குச் சந்தையில் சிறிய தனிநபர் முதல் மிகப்பெரும் பணக்காரர்கள் வரை  எங்கிருந்து வேண்டுமானாலும் பங்குபெறலாம் . பங்குச் சந்தை நிறுவனங்களின் பணத்தை அதிகரிக்கும் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இது நிறுவனத்தின்  பங்குகளை விற்று கூடுதல் முதலீட்டுத் தொகையை பெறவும் வழிவகுக்கிறது .

sensex க்கான பட முடிவு

மும்பை பங்கு சந்தை :

மும்பை பங்குச் சந்தை ஆசிய கண்டத்தின் மிகப் பழைய பங்குச் சந்தை இதுவாகும். இந்தியாவின் தலைநகர் மும்பையின் தலால் வீதியில் அமைந்துள்ளஇந்த பங்குசந்தை  1875 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஆசியாவில் 4_ஆவது மற்றும் உலகின் 8_ஆவது பெரிய பங்குச் சந்தை ஆகும்.

தேசியப் பங்கு சந்தை 

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய பங்கு சந்தை 1993_ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  மொத்தச் சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் இதுவே  ஆசியாவின்  இரண்டாவது பங்குச் சந்தை. உலகளவில் வளர்ந்து வரும் பங்குச்சந்தைகளில் இரண்டாம் நிலையில் உள்ளது. தேசியப் பங்குச் சந்தை, ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 மணி முதல் மாலை 3.30 வரை செயல்படும்.

sensex க்கான பட முடிவு

சென்செக்ஸ்:

பி.எஸ்.இ சென்செக்ஸ் (BSE Sensex) மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் என்பது 30 நிறுவனங்களின் பங்குகளுக்கான இன்டெக்ஸ் உருவாக்கப்பட்டு, அது சென்செக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

நிஃப்டி :

என்.எஸ்.இ நிஃப்டி  (NSE NIFTY) நிஃப்டி என்பது இந்தியாவில் உள்ள தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பிரபலமான 50 கம்பெனிகளுடைய பங்குகளின் இன்டெக்ஸ் ஆகும்.

பங்குசந்தை நிலவரம் : 

இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன் 187 புள்ளிகள் அதிகரித்த சென்செக்ஸ்  40,000 புள்ளிகளைக் கடந்தது , சென்செக்ஸ் 40,018 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே போல நிப்டி தொடங்கிய போது 11,999.80 புள்ளிகளில் இருந்து 87.80 புள்ளிகள் உயர்ந்து 12,033.70 புள்ளியாக உள்ளது.

 

Categories

Tech |