நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவு குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா குறித்து இரண்டாவது முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தினார்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பல தடைகளை உடைச்சு உலக கோப்பை , ஆஸ்கார் விருதுனு வாங்கின நமக்கு, கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் ஒரு சவால். இதை 31 நாள் ஊரடங்கு உத்தரவில் ஜெய்ச்சு உலகத்துக்கு முன்னாடி கெத்தா காலரதூக்குரதுக்காக எல்லாரும் வீட்டிலே இருங்க என்று பதிவிட்டுள்ளார்.
Let me tweet a குட்டிstory,Pay attention listen2 @PMOIndia தடைகளை உடைச்சு WorldCup, Oscarன்னு வாங்கின நமக்கு, கண்ணுக்குத்தெரியாத #Corona ஒரு சவால்.இதை #21daysoflockdown ல் ஜெய்ச்சு உலகத்துக்கு முன்னாடி கெத்தா காலரதூக்குரதுக்காக #StayAtHomeSaveLives @CMOTamilNadu @Vijayabaskarofl
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 24, 2020