அமெரிக்காவில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு அதிபர் டிரம்ப் திடீரென சென்றதால் மணமக்கள் உட்பட அங்கிருந்தவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பி.ஜே. மொங்கெல்லி (PJ Mongelli) தனது திருமணத்திற்கு வரும்படி அழைப்பிதழ் விடுத்திருந்தார். அதிபர் டிரம்ப் திருமண நிகழ்ச்சிக்கு வருவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் திடீரென நியூ ஜெர்ஸியில் நடந்த அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு டிரம்ப் வந்து மணமக்கள் மற்றும் அங்கிருந்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தார்.
அதிபர் டிரம்பைக் கண்டதும் விருந்தினர்கள் மகிழ்ச்சியுடன் யூ.எஸ்.ஏ, யூ.எஸ்.ஏ என ஆரவார முழக்கம் எழுப்பினர். அங்கிருந்தவர்கள் அனைவரும் அவரை புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மணமக்களும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்ததோடு மட்டுமில்லாமல் டிரம்பை ஒரு ஜென்டில்மேன் என புகழாரம் சூட்டி மகிழ்ந்தனர். டிரம்புடன் மணமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.