Categories
தேசிய செய்திகள்

ஐ.என்.எக்ஸ் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு..!!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் வழங்காததை எதிர்த்து ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்ற வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் முன்னாள் நிதியமைசர் ப.சிதம்பரத்தின்முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மேல் முறையீடு செய்திருக்கிறார். டெல்லி உயர்நீதிமன்றம் முன்  ஜமீனை இரத்து செய்ததை அடுத்து பா.சிதம்பரம் கைது செய்ய

Image result for chidambaram supreme court

வாய்ப்பிருப்பதாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்ததை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் இந்த மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நாளைய தினம் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்யிடம் வலியுறுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |