Categories
தேசிய செய்திகள்

ஐ.என்.எக்ஸ் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது….!!

ப.சிதம்பரத்தின் ஐ.என்.எக்ஸ் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்யக்கூடாது என்று முன்ஜாமீன் கேட்ட வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் ப.சிதம்பரம் சார்பாக கபில் சிபில் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர்  வடித்தாடுகின்றனர். ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்தது இன்று 12 மணியோடு நிறைவடைகின்றது.

இந்தநிலையில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் கேட்டு ஒருபக்கம் வாதம் நடந்தாலும் இன்னொரு பக்கம் சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் குழு சிபிஐ சிதம்பரத்தை கைது செய்தது சட்டத்துக்கு புறம்பானது. அவரை கைது செய்ய அளிக்கப்பட்ட வாரண்ட் செல்லாது என்றும் வாதிட்டு வருகின்றனர். மத்திய அரசு அமைப்புகள் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை எடுத்து வைக்கிறார்.தற்போது இந்த விசாரணை நடைபெற்று வருகின்றது.

Categories

Tech |