Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்…!!

ஐ.என்.எக்ஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் கேட்ட அனைத்து ஆவணங்களையும்  அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது என்று அவருக்கு முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் நேற்றைய  விசாரணையில் ப.சிதம்பரம் தரப்பு ,  அமலாக்கத்துறை  தரப்பு வாதங்கள் முழுமையாக முடிவடைந்தது. வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்.

அமலாக்கத்துறை சார்பில் ப.சிதம்பரத்திடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டது , எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டது ,எத்தனை முறை ஆஜரானார் உள்ளிட்ட விவரங்களை சீலிடப்பட்ட கவரில் , அமலாக்கத் துறைக்கு அதிகாரப்பூர்வமான முத்திரையுடன்  உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து உச்சநீதிமன்றம் கேட்ட அனைத்து ஆவணங்களையும் அமலாக்கத்துறையினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

Categories

Tech |