அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் உளறி கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தினை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதையடுத்து ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக சார்பில் திண்டுக்கல்லில் நடந்த மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசியுள்ளார்.
அப்போது அவர், “தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 2500 கொடுக்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் திமுகவினர் தடை உத்தரவு போடும்படி கேட்டனர். ஆனால் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகள் கூறியதால் நமக்கு பொங்கல் பரிசை மகிழ்ச்சியாக பெற முடிந்தது. மேலும் “தயவுசெய்து இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று பாருங்கள். எவ்வளவு அசிங்கமாக போய்க்கொண்டிருக்கிறது என்று சிந்தியுங்கள்” என்று அதிமுக அரசை பற்றி அமைச்சர் இப்படி உளறி கொட்டியதால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.