கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதன்படி இதுவரை இந்தியாவில் மட்டும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பாதிப்புகளின் அடிப்படையில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கை விதித்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.
மேலும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவரும் மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பால் மீண்டும் இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.