Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படித்தான் பண்ணனும்..! நயன்தாராவுக்கு சொல்லி கொடுக்கும் விக்னேஷ் சிவன்..!!

நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் நம்பர் 1 ஹீரோயினியாக இன்றும் இருக்கக்கூடியவர் லேடி சூப்பர் ஸ்டார், அழகி, ஏஞ்செல் என்று சொல்லிக்கொண்டே போகலாம் நடிகை நயன்தாராவை. அவர் முதன் முதலில் தமிழ் மொழியில் சரத்குமார் கதாநாயகனாக நடித்திருந்த “ஐயா” என்ற படத்தின் மூலமாகத்தான் திரை உலகிற்கே அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார்.

இந்த படத்தை, மறைந்த புகழ்மிக்க ஜாம்பவான் பாலச்சந்திரரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது. நயன்தாரா நடித்த முதல் படமே பெரிய அளவில் வெற்றி பெற்று விட்டதால், அவர் மிகவும் ராசியான நாயகி என்று புகழப்பட்டார். இவர் தமிழ், மலையாளம் என்று நடித்து கொண்டிருந்த போதிலும், தெலுங்கு திரை உலகில் கால் பதித்தார். பின் அங்கேயும் பிரபல நாயகி என்று ஆகிவிட்டார்.

இருந்தாலும் திரை உலகில் நம்பர் 1 இடத்தில் இருக்கக்கூடிய நம் நயன்தாராவுக்கு 34 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை. இதற்கு முன்னாடி அவர் சிம்பு, பிரபுதேவா உடன் காதல் பூவாக மலர்ந்து பின் சிறிது நாட்களிலே அதுவும் கருகிப்போனது. அதன் பிறகு தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் வரார், நம்ம நயன்தாரா வாழ்க்கையில்.  நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார்.

கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். அப்பொழுதான் இருவருக்கிடையில் காதல் என்னும் பட்டாம்பூச்சி பறக்க, உடனே இவர்கள் இரண்டு பேரும் வெளிநாடுகளுக்கு செல்வதென்ன, அங்கே சுற்றுவது என்ன, இது மட்டுமல்லாமல் சில பொது நிகழ்ச்சிகளிலும் ஜோடியாக பங்கேற்பார்கள். கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்து புகைப்படம் எடுத்து அதையும் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.

இப்படி இருக்கும்போது நானும் ரவுடிதான் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தற்போது விக்னேஸ் சிவன் வெளியிட்டார். அந்த வீடியோவில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இருவரும் கடற்கரை ஓரம் நின்றபடி பேசும் காட்சி குறித்து விக்னேஷ் சிவன் விளக்குகிறார். அவர் கூறும் அழகை, நயன்தாரா ஆர்வத்துடன், புன்னகைத்து கொண்டே கேட்டு கொண்டு நிற்கிறார்.

இதுவரைக்கும் வெளியிடப்படாத இந்த வீடியோ இப்பொழுது இருக்கும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். நயன்தாரா நடித்து கொண்டிருக்கும் நெற்றிக்கண் படத்தை இவர்தான் தயாரிக்கிறாம். இதுமட்டுமல்லாமல் நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தையும் விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என்பது குறிப்பிடதக்கது.

https://www.instagram.com/p/B_eteFehMoY/

 

 

Categories

Tech |