Categories
டெக்னாலஜி

iPhone வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான சூப்பர் ஆஃபர்….!!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு ரிலையன்ஸ் டிஜிட்டல் இ ஸ்டோரில்  iPhone 13 வாங்குவோருக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. iPhone 13 பேஸ் வேரியண்ட் விலை 72 ஆயிரத்து 990 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு கூடுதலாக 4 ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் மற்றும் 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுள்ளது. iPhone 12 பேஸ் வேரியண்ட் 53 ஆயிரத்து 300 ரூபாய் விலையிலும், ஐபோன் 11 (128 ஜிபி) 47 ஆயிரத்து 990 ரூபாய் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. iPhone 13 சீரிசில் – iPhone 13 மினி, iPhone 13, iPhone 13 ப்ரோ மற்றும் iPhone 13 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

iPhone 13 மாடலில் 2532×1170 பிக்சல் XDR OLED டிஸ்ப்ளே, ஏ15 பயோனிக் சிப்செட் , 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. iPhone 13 மாடல் 128 gb, 256 gb மற்றும் 512 gb என மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அடுத்த மாதம் அறிமுகமாகும் iPhone 14 மாடலில் 6.1 இன்ச் அளவிலும், iPhone 14 மேக்ஸ் மாடல் 6.7 இன்ச், iPhone 14 ப்ரோ 6.1 இன்ச் அளவிலும், iPhone 14 ப்ரோ மேக்ஸ் மாடல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |