Categories
உலக செய்திகள்

ஐபோன் 11, மேக் புக் ஏர்… எல்லாம் சரி; 4 ஆயிரம் டாலர் எதற்கு? வைரலாகும் 10 வயது சிறுமியின் கடிதம்!

கிறிஸ்துமஸ் பண்டிகை அன்பளிப்பாக சாண்டா கிளாஸிடம், 26 வகையான பொருட்களை கேட்ட 10 சிறுமியின் கடிதம் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை அடுத்த மாதம் வெகுவிமர்சையாகக் கொண்டாட பல்வேறு நாடுகளிலும் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இன்னும் ஒருமாதம் பண்டிகைக்கான நேரம் இருக்கும் நிலையில், 10 வயது சிறுமி தனக்கு தேவையான 26 பொருட்களின் பட்டியலை கடிதமாக எழுதி சாண்டா கிளாஸிடம் கேட்டுள்ளார். அந்த கடிதம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கிறிஸ்துமஸ் லிஸ்ட் என்று தொடங்கும் அந்த கடிதத்தில், ஐபோன் 11, ஏர் பாட்ஸ், புதிய மேக் புக் ஏர், மேக் அப், பெர்ஃப்யூம், ஷூ, கோ – ப்ரோ, 4 ஆயிரம் டாலர் பணம் என பட்டியல் நீள்கிறது.

கிறிஸ்துமஸ் லிஸ்ட்

தற்போது இந்த கடிதம் ட்ரெண்டாகி வரும் நிலையில், அனைவரும் மற்ற பொருட்கள் எல்லாம் சரி, 4 ஆயிரம் டாலர் பணம் எதற்கு என்ற கேள்வி எழுப்பி பல்வேறு பதில்களையும் கூறிவருகின்றனர். 10 வயது சிறுமியின் வெள்ளந்தியான கடிதத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டுவதோடு, இந்த கடிதம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |