Apple நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட iPhone 14 சீரிஸ் விற்பனை இந்தியாவில் தொடங்குகிறது. ஐபோன் 14, iPhone 14 ப்ரோ மற்றும் iPhone 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் விற்பனை தொடங்குகிறது. iPhone மாடல்களுடன் Apple புதிய ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்தது. இந்தியாவில் iPhone 14 விற்பனை Apple இந்தியா ஆன்லைன் ஸ்டோர், Flipkart மற்றும் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது. இந்தியாவில் iPhone 14 மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்று வித மெமரி மாடல்களில் விலை முறையே ரூ. 79, 990, ரூ. 89, 900 மற்றும் ரூ. 1, 09, 900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புது iPhone வாங்குவோர் தேர்வு செய்யப்படும் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 5, 000 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. iPhone 14 ப்ரோ மாடலின் விலை ரூ. 1, 29, 900 என துவங்கி அதிகபட்சம் ரூ. 1, 39, 900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. iPhone 14 ப்ரோ மேக்ஸ் மாடல் விலை ரூ. 1, 39, 900 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1, 89, 900, Apple வாட்ச் சீரிஸ் 8 விலை ரூ. 45, 900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ச் கோல்டு கிராபைட், சில்வர், மிட்நைட், ஸ்டார்லைட் மற்றும் ரெட் நிறத்தில் கிடைக்கிறது.