Categories
டெக்னாலஜி

iPhone 14 சீரிஸ் விற்பனை…… Apple நிறுவனத்திற்கு ஏமாற்றமா….?? வெளியான தகவல்….!!!

Apple நிறுவனம் இம்மாத துவக்கத்தில் iPhone 14 சீரிஸ் மாடல்களை  அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் உலக நாடுகளில் புதிய iPhone 14 சீரிஸ் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என தகவல் வெளியானது. இதுகுறித்து தனியார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் Apple  நிறுவனம் iPhone 14 சீரிஸ் உற்பத்தியை 60 லட்சம் யூனிட்களாக குறைக்கும்படி தனது உற்பத்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் iPhone 14 ப்ரோ சீரிஸ் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது. iPhone 14 ப்ரோ மேக்ஸ் இந்நிலையில் iPhone 14 மற்றும் iPhone 14 பிளஸ் மாடல்களுடன் ஒப்பிடும் போது iPhone 14 ப்ரோ சீரிசுக்கு அதிக முன்பதிவுகள் கிடைத்துள்ளன. இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் 9 கோடி iPhone-களை விற்பனை செய்ய Apple  நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |