கிளார் அட்ஃபீல்டு என்ற பெண்மணி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வாக்கில் சர்ஃபிங் செய்வதற்காக கடலுக்கு சென்றுள்ளார். அவர் கடலுக்குள் சர்பிங் செய்யும்போது எப்போதுமே தன்னுடைய ஐபோன் பையை கழுத்தில் மாட்டிக் கொள்வாராம். அப்படி வழக்கமாக மாட்டிக் கொண்டு சர்பிங் செய்யும்போது கடலுக்குள் தவறி ஐபோன் பை விழுந்துள்ளது. அவர் ஐபோன் 8 பிளஸ் மாடல்-ஐ கடலுக்குள் தொலைத்துள்ளார். இந்நிலையில் ஒரு வருடமாக கடலுக்குள் மூழ்கி இருந்த ஐபோனை தற்போது கிளார் கண்டுபிடித்துள்ளார்.
இந்த போனை பிராட்லி காட்டன் என்ற நாய் தான் கடலுக்குள் இருந்து கண்டுபிடித்து இருக்கிறது. இந்நிலையில் ஐபோனை நீர் புகாத ஒரு பையில் கிளார் தன்னுடைய தாயாரின் மருத்துவ அட்டையுடன் சேர்த்து வைத்துள்ளார். இந்த ஐபோன் தற்போது 450 நாட்களுக்கு பிறகு கடலுக்குள் இருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐபோன் நன்றாக வேலை செய்வதாக கிளார் கூறியுள்ளார். மேலும் ஒரு வருடமாக கடலுக்குள் இருந்த ஐபோன் மீண்டும் நன்றாக வேலை செய்வதை தன்னால் நம்பவே முடியவில்லை என கிளார் கூறியுள்ளார்.