Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL போட்டியில்…. சீன நிறுவனங்களுக்கு அனுமதி….. அதிகாரபூர்வ தகவல்…!!

ஐபிஎல் போட்டியில்  ஸ்பான்சர்க்காக சீன  நிறுவனங்களை அனுமதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பு தற்போதைக்கு கட்டுப்படுத்த சிரமமாக இருப்பதால், பல விஷயங்கள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. அந்த வகையில் பள்ளி, கல்லூரிகள்  திறப்பதற்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதேபோல்,

கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டியானது ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த வருடத்திற்கான ஐபிஎல் சீசன் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டதாகவும், ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் போட்டி வழக்கமான 8 மணிக்கு தொடங்காமல் 7.30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சீன நிறுவனங்கள் உட்பட அனைத்து ஸ்பான்சர்களையும் அனுமதிக்க  ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருபுறம் லடாக் எல்லையில் இந்திய சீன ராணுவத்திற்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என இந்திய மக்கள் கோரிக்கை விடுத்து வரும் சூழலில், ஐபிஎல் போட்டியில் ஸ்பான்சருக்காக சீன நிறுவனங்களை அனுமதிப்பது இந்திய மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தும் செயலாக இருப்பதாக கருத்துகள் வெளியாகி வருகின்றன. 

Categories

Tech |