கடந்த 26ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15வது சீசன் தொடங்கியது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற ஏழாவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் 210 ரன்களை குவித்தது.
8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கைப்பற்றியது. இந்த போட்டியில் சென்னை அணியின் வீரர் பிரோவா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதன் காரணமாக அவர் ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதன் மூலமாக 150 இன்னிங்சில் 171 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.