Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL-லில் இருந்து நீக்கப்பட்ட டெக்கான் சார்ஜர்ஸ்…. 4800 கோடி இழப்பீடு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

ஐபிஎல் போட்டிகளில் இருந்து விளக்கப்பட்ட டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு ரூபாய் 4,800 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டில் ஐபிஎல் கிண்ணத்தை வென்ற அணி டெக்கான் சார்ஜஸ். ஹைதராபாத் நகரின் சார்பாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ளது. 2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை ஐபிஎல்லில் விளையாடிய இந்த அணியை 2012ம் ஆண்டு விலக்கியுள்ளது பிசிசிஐ நிறுவனம். வங்கி உத்தரவாதம் கொடுத்த தொகையான ரூபாய் 100 கோடியை செலுத்த தவறியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பிறகு ஹைதராபாத் சார்பில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று உள்ளது.

இதை அடுத்து டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையாளரான டெக்கான் கார்னிகல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்திருந்தது. மும்பை நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நடுவர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தக்கார் இந்த வழக்கை விசாரித்துள்ளார். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் இருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணியை நீக்கியது சட்டவிரோதத்திற்குரியது. எனவே அந்த அணிக்கு இழப்பீடு தொகையாக 4,800 கோடி வழங்க வேண்டும் 2012ல் உள்ள 10% வட்டியையும் வழங்க வேண்டும் என பிசிசிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து பிசிசிஐ மேல்முறையீடு செய்யும் என நம்பப்படுகிறது.

Categories

Tech |