Categories
கிரிக்கெட் விளையாட்டு

“IPL-ல் ரசிகர்களுக்கு அனுமதி?”…. BCCI திட்டம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

அண்மையில் பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று கூறியிருந்தார். மேலும் போட்டிகள் அனைத்தும் வான்கடே மைதானம், டி. ஒய் பாட்டில் மைதானம் மற்றும் புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அவர் கூறியிருந்தார். அதேபோல் திட்டமிட்டபடி பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஏலம் நடைபெறும் எனவும் கூறப்பட்டது. ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று வெளியாகியுள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் IPL போட்டிகளில் 25% ரசிகர்களுக்கு அனுமதி வழங்க BCCI திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் லீக் ஆட்டங்கள் முழுவதும் மும்பை மற்றும் புனேவில் நடத்திவிட்டு ப்லே-ஆஃப் மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடத்த BCCI திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நாட்டில் கொரோனா நிலவரம் குறித்து இது மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.

Categories

Tech |