IPL கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியானது, 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டை கைப்பற்றினார். இதன் வாயிலாக IPL வரலாற்றில் 150 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வேகப் பந்து வீச்சாளர் என்ற சாதனையை எட்டினார்.
மேலும் ஒட்டுமொத்த வேகப்பந்து வீச்சாளர்களில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் பிராவோ (174), இலங்கை வீரர் மலிங்கா (170) போன்றோரை தொடர்ந்து IPL போட்டியில் 150 விக்கெட் வீழ்த்திய 3-வது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் புவனேஸ்வர் குமார் பெற்றுள்ளார். இதேபோன்று அமித் மிஷ்ரா (166), பியூஷ் சாவ்லா (157), யுஸ்வேந்திர சாகல் (151), ஹர்பஜன் சிங் (150) போன்றோரும் 150 விக்கெட் என்ற மைல்கல்லை கடந்து உள்ளனர்.