ஐபிஎல் 2020 க்கான போட்டியில் சென்னை அணியின் ரசிகர்களுக்கான சோகமான தகவல் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்து வருவதால், இந்தியாவில் ஐபிஎல் 2020 காண சிசன் போட்டி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தப் போட்டியானது நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு வீரர்கள் தங்களை ஆயத்தம் செய்ய, தற்போது தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ipl போட்டி தொடங்க இருக்கும் சூழ்நிலையில், துபாய் சென்ற சென்னை அணி வீரர்கள், நிர்வாகத்தினர் சிலருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் மும்பை அணியுடனான ஆட்டத்தில், சென்னை அணி பங்கேற்காது எனவும், அதற்கேற்றவாறு போட்டிக்கான அட்டவணை வெளியாகும் என்பது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் சென்னை அணியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.