இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஐந்தாவது முறை சம்பியன் பட்டம் வென்றது.இந்த ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக ஆடிய வீரர்களுக்கு பல விருதுகள் வழங்கப்பட்டன. கடைசி போட்டியின் ஆட்டநாயகனாக மும்பை அணியை சார்ந்த போல்ட் தேர்வு செய்யப்பட்டார். மதிப்பு மிக்க வீரர் என்ற தொடரில் தொடர் நாயகன் விருது ராஜஸ்தான் அணியின் ஆர்ச்சருக்கு வழங்கப்பட்டது.
பேர்பிளே விருது மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், வளரும் வளரும் வீரர் என்ற விருது பெங்களூரின் படிக்கல், சக்தி மிக்க வீரர் மும்பை இந்தியன்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் போல்ட்டும், அதிக சிக்சர் அடித்த வீரருக்கான விருது மும்பை இந்தியன்ஸ் அணியின் இஷான் கிஷன், சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருது மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பொல்லார்ட்டுக்கும், கேம் சேஞ்சர் விருது, அதிக ரன்கள் விருது பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுலுக்கும், அதிக விக்கெட்டை வீழ்த்திய வீரருக்கான விருது டெல்லி கேப்பிடல் அணியின் வீரர் ரபாடாவுக்கும் வழங்கப்பட்டது.