Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : சிஎஸ்கே-வின் ‘கடைக்குட்டி சிங்கம்’ …. சாம் கர்ரன் அமீரகம் வந்தடைந்தார் ….!!!

14-வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டத்தில் பங்கேற்க சிஎஸ்கே அணி வீரரான சாம் கர்ரன் இன்று அமீரகம்  வந்தடைந்தார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ரத்தான நிலையில் ஐபில் தொடரில் பங்கேற்க சிஎஸ்கே அணி வீரர்கள்  ஜடேஜா ,புஜாரா மற்றும்  மொயீன் அலி  ஆகியோர் கடந்த சனிக்கிழமை துபாய் வந்தடைந்தனர் .ஆனால் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற     சாம் கர்ரன்  அவர்களுடன் துபாய் வரவில்லை.

இந்த நிலையில் ஆல்ரவுண்டரான சாம் கர்ரன் இன்று அமீரகம்  வந்தடைந்தார். இதனை சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது மேலும்  சாம் கர்ரன் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட இருப்பதால் ,மும்பை இந்தியன்ஸ் அணியுடனான முதல் ஆட்டத்தில் அவர் பங்கேற்க மாட்டார்.

Categories

Tech |