இந்த 2021 ம் ஆண்டு ஐபில் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் முறையாக சாதனை படைத்துள்ளது .
14வது ஐபிஎல் தொடரின் 27 வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டி கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்ததால் சென்னை அணி பேட்டிங்கில் களமிறங்கியது. குறிப்பாக டு பிளிசிஸ்,மொயின் அலி மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 218 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய மும்பை அணி 219 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது .
பரபரப்பான இறுதிகட்டத்தை கடைசி பந்தில் மும்பை அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. குறிப்பாக பொல்லார்ட் அதிரடியாக விளையாடினார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ,மும்பை அணி ஐபிஎல் வரலாற்றில் சாதனை படைத்துள்ளது. இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள மும்பை அணி, 14 வருடங்களாக நடைபெற்ற போட்டியில் 200 ரன்களுக்கு மேல் சேசிங் செய்தது இல்லை. ஆனால் இந்த சீசனில் சென்னைக்கு எதிரான போட்டியில் 219 ரன்கள் குவித்துள்ளது. இதனால் இந்த சீசனில் முதல் முறையாக 200 ரன்களை கடந்து சீசன் செய்து சாதனை படைத்துள்ளது.