Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : 2-வது பாதி ஆட்டத்தில் பங்கேற்க …. துபாய்க்கு திரும்பிய வீரர்கள் ….!!!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில்  நடைபெற இருந்தது .ஆனால் இந்திய அணி பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட் ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் இந்திய அணி வீரர்களுக்கும் 2முறை  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது .இந்த பரிசோதனையில் வீரர்களுக்கு தொற்று இல்லை என்ற நெகட்டிவ் முடிவு வந்தாலும் அவர்கள் டெஸ்ட் போட்டியில் விளையாட மறுத்துவிட்டனர். இந்நிலையில் வருகின்ற 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ள ஐபிஎல்  2-வது பாதி ஆட்டத்தில் பங்கேற்பதற்காக இங்கிலாந்திலிருந்து இந்திய அணி வீரர்கள் துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதனிடையே  ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோர் தனி விமானம் மூலமாக நேற்று துபாய்க்கு சென்றடைந்தனர்

அவர்கள் ஹோட்டலில் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் உள்ளனர். இந்த தனிமைப்படுத்தலின் போது  அவர்களுக்கு 3 முறை பரிசோதனை செய்யப்படும் .இதையடுத்து நியூசிலாந்து வீரர் கைல் ஜாமிசன் ஆஸ்திரேலியா வீரர் டேன் கிறிஸ்டியன் ஆகியோரும் ஆர்சிபி அணியுடன் இணைந்துள்ளனர். இதையடுத்து சிஎஸ்கே அணியை சேர்ந்த ரவீந்திர ஜடேஜா ,ஷர்துல் தாகூர் மொயீன் அலி ஆகியோர் நேற்று முன்தினம் துபாய்க்கு வந்தடைந்தனர். தற்போது சிபில்  தொடரில் விளையாடி வரும் இம்ரான் தாஹிர், டு பிளிஸ்சிஸ் மற்றும் பிராவோஆகியோர் தொடர் முடிந்தவுடன் சிஎஸ்கே அணியுடன் இணைவார்கள். இதைத் தொடர்ந்து டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்களான ரிஷப் பண்ட் ,அஸ்வின் ,பிரித்வி ஷா இஷாந்த் ஷர்மா மற்றும் ரஹானேஆகியோரும் நேற்று  துபாய் வந்தடைந்தனர்.

Categories

Tech |