Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: 6 வது வெற்றியை கைப்பற்றுமா ஆர்சிபி …! பஞ்சாப்-பெங்களூர் இன்று மோதல் …!!!

இன்றைய 26 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

இன்று நடைபெற உள்ள 26 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி  அகமதாபாத்தில் உள்ள , நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இதில் 6 போட்டிகளில் விளையாடிய ஆர்சிபி அணி , 1 தோல்வியை சந்தித்து, 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

அதுபோல 6 போட்டிகளில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி , 4 தோல்வியை சந்தித்து , 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே இன்றைய போட்டியில் ஆர்சிபி  அணி  6வது வெற்றியை  கைப்பற்றுமா , அல்லது பஞ்சாப் கிங்ஸ் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா, என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது .

Categories

Tech |