Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : அமீரகத்தில் பயிற்சியை தொடங்கியது மும்பை இந்தியன்ஸ்…!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

14-வது ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் , தொடரின் போது ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை 21 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மீதமுள்ள 31 லீக்  போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சிஎஸ்கே -மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்காக பயிற்சிகளை மேற்கொள்ள சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும்  ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளனர் .

கடந்த 13-ஆம் தேதி முதல் வீரர்கள் அனைவரும் குவாரண்டைனில் இருந்த நிலையில் , தற்போது அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டத்தில்  நெகட்டிவ் முடிவு வந்ததால், பயிற்சி மேற்கொண்டு உள்ளனர். இந்நிலையில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி நேற்று முன் தினம் தங்களது முதற்கட்ட பயிற்சியில் ஈடுபட்டனர் .இதற்கிடையே முதல் போட்டியில் சிஎஸ்கே-வுடன் மோத உள்ள  மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் நேற்று முதல் தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தற்போது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்று இருப்பதால், திட்டங்கள் ஏதுமின்றி வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |