ஐபிஎல் 2021 சீசனில் 10 போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 433 ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பியை தன்வசமாகியுள்ளார் .
ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நட்சத்திர வீரர்கள் பலரும் ரன் குவிப்பில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் .அதன்படி ஷிகர் தவான் ,கேஎல் ராகுல் ,டு பிளிஸ்சிஸ், ருதுராஜ் கெய்க்வாட்மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஐபிஎல் சீசன் தொடங்கியதிலிருந்தே முன்னணி வீரர் ஷிகர் தவான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இதில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் தவான் ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்திருந்தார்.
இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் நேற்று நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 82 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 10 போட்டிகளில் விளையாடி 433 ரன்கள் குவித்து முதல் இடத்தை பிடித்துள்ளார் .இதனால் முன்னணி வீரர் தவானை பின்னுக்குத்தள்ளி ஆரஞ்சு தொப்பியை தன்வசம் ஆக்கியுள்ளார் சஞ்சு சாம்சன் .இதுவரை 10 போட்டிகளில் விளையாடிய ஷிகர் தவான் 430 ரன்கள் குவித்துள்ளார். இதையடுத்து கே.எல்.ராகுல் 9 போட்டிகளில் 402 ரன்னும் ,டு பிளிஸ்சிஸ் 394 ரன்னும் , ருதுராஜ் கெய்க்வாட் 362 ரன்னும் எடுத்துள்ளனர்.