இன்றைய போட்டியில் 22-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
14வது ஐபிஎல் தொடரில் 22-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது. இதில் 5 போட்டிகளில் விளையாடிய ஆர்சிபி அணி ,1 தோல்வியை மட்டும் சந்தித்துள்ளது.
இதுபோல 5 போட்டிகளில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி , 1 தோல்வியை சந்தித்து 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே இரு அணிகளும் சமநிலையில் வெற்றியை கைப்பற்றி உள்ளதால் ,இன்று நடக்க உள்ள போட்டியில் 5வது வெற்றியை ,எந்த அணி ருசிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.