கொல்கத்தா அணியிடம் தோல்வியடைந்த பெங்களூர் அணி நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.
14-வது ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூர் – கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவரில் 138 ரன்கள் குவித்தது.இதன்பிறகு களமிறங்கிய கொல்கத்தா அணி 139 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குவாலியர் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
இதில் நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட் கைப்பற்றினார். நடப்பு சீசனில் ஐபிஎல் தொடரில் மொத்தம் 32 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் அதிக விக்கெட் கைப்பற்றிய சிஎஸ்கே வீரர் பிராவோ சாதனையை சமன் செய்துள்ளார்.கடந்த 2013 ஐபிஎல் சீசனில் பிராவோ 32 விக்கெட் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது .