Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : டெல்லி அணியின் கேப்டன் யார் …..? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ….!!!

ஐபிஎல் தொடரின்  இரண்டாவது பகுதி ஆட்டத்திலும் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுவார் என டெல்லி கேப்பிடல்ஸ்  அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

14-வது சீசன்  ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா  தொற்று பரவல்  காரணமாக  ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது . இந்நிலையில் இரண்டாவது பகுதி ஆட்டம் அமீரகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதனிடையே மீதமுள்ள ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ்  அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வந்தது.

ஏனெனில் காயத்திலிருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் தற்போது அணிக்கு  திரும்பி உள்ளதால் ரிஷப் பண்ட் , ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவரில் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்த நிலையில் அமீரகத்தில் நடக்கும் மீதமுள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தான் கேப்டனாக செயல்படுவார் என்று டெல்லி கேப்பிடல்ஸ்  தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Categories

Tech |