Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கேப்டன் யார்….? வெளியான முக்கிய தகவல் ….!!!

நடப்பு சீசனில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது . 

14 – வது ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவில் ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் தொடரின் போது ஒரு சில வீரர்களுக்கு கொரோன  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி  ஒத்திவைக்கப்பட்டது .இந்த நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் போது டெல்லி கேப்பிடல்ஸ்  அணியின் கேப்டனான  ஷ்ரேயாஸ் ஐயருக்கு  காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக நடப்பு சீசனில் இளம் வீரர் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸ்  அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இதில் டெல்லி அணியை  சிறப்பாக வழிநடத்திய ரிஷப் பண்ட் 8 போட்டிகளில் 6-யில் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி  முதலிடத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் காயத்திலிருந்து குணமடைந்தத ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு தயாராகி உள்ளார் .இதனால் டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது. இதற்கு  டெல்லி கேப்பிடல்ஸ்  அணியின் நிர்வாகி ஒருவர் கூறும்போது,” டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் தொடர்வார்” என்று தெரிவித்துள்ளார் .ஆனால் இந்த தகவல் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றாலும் ,அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுவார் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

Categories

Tech |