14வது ஐபிஎல் தொடரில் , இன்று நடக்கும் 2 போட்டிகளில் , ராஜஸ்தான்-ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் – டெல்லி ஆகிய அணிகள் மோதுகின்றன .
ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
இன்று டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கும், 28வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான் அணி , 2 போட்டிகளில் வெற்றி பெற்று, 4 தோல்விகளை சந்தித்து உள்ளது. இதைத்தொடர்ந்து 6 போட்டிகளில் விளையாடிய ஹைதராபாத் அணி , 5 தோல்வியை சந்தித்து , ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எனவே இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி தொடர் தோல்விக்கு ,முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் :
அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கும் மற்றொரு ஆட்டத்தில் ,பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய டெல்லி அணி , 5 போட்டிகளில் வெற்றி பெற்று ,2 தோல்வியை சந்தித்து தரவரிசை பட்டியலில் 2 வது இடத்தை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து 7 போட்டிகளில் விளையாடிய பஞ்சாப் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று, 4 தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது