முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ்,106 ரன்களை குவித்துள்ளது . 107 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சென்னை விளையாடுகிறது
14வது ஐ.பி.எல் தொடரின் 8-ஆவது லீக் போட்டியில் , இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கன்டே மைதானத்தில் நடக்கிறது . இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது .பஞ்சாப் கிங்ஸின் தொடக்க வீரர்களாக கே .ல் ராகுல் -மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்க, மயங்க் அகர்வால் 2 பந்துகளில் ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார் .அடுத்து கிறிஸ் கெயில் 10 பந்துகளில் 10 ரன்களை எடுத்து வெளியேறினார் .அடுத்ததாக கேப்டன் கே .ல் ராகுல் 7 பந்துகளில் ,5 ரன்களை எடுத்து ரன் அவுட் ஆனார் .அதிரடி ஆட்டக்காரரான தீபக் ஹூடா 15 பந்துகளில் ,10 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .
இதன் பின் ஆடிய நிக்கோலஸ் பூரன் 2 பந்துகளில் ,ரன் எடுக்காமல் அவுட் ஆனார் .எனவே பஞ்சாப் கிங்ஸ் 6.2 ஓவரிலே 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது .அதன் பின் ஷாருக்கான் – ஜெய் ரிச்செட்சன் களமிறங்கினர் . ஜெய் ரிச்செட்சன் 22 பந்துகளில் ,15 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் . இறுதி வரை போராடிய ஷாருக் கான் 36 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் .இறுதியாக பஞ்சாப் அணி 106 ரன்களை குவித்தது . இதில் சிஎஸ்கே அணியின் பவுலரான தீபக் சாஹர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . பேட்டிங்கியில் களமிறங்கிய சிஎஸ்கே 107 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடுகிறது .