14 -வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்றைய 55-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
14 -வது சீசன் ஐபிஎல் தொடரில் கடைசி நாளான இன்று இந்த லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. அதே நேரத்தில் துபாயில் நடக்கும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதில் நடப்பு சீசனில் சென்னை ,டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய மூன்று அணிகளும் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் மீதமுள்ள 4-வது பிளே ஆப் சுற்றில் நுழைவது கொல்கத்தாவா ? அல்லது மும்பையா ? என்பது இன்றைய ஆட்டத்தில் தெரிந்துவிடும்.ஏனெனில் நேற்று நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு கிட்டத்தட்ட தகுதி பெற்றுவிட்டது .
அதேசமயம் 4-வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியின் ரன் ரேட் 0.587 ஆக உள்ளது. இதனிடையே நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிபட்டியல் 12 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது .இதனால் ப்ளே ஆப் சுற்றுக்கு நுழைய ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும் .அதாவது மும்பை அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கி 250 ரன்கள் குவிக்க வேண்டும். அதேசமயம் ஹைதராபாத் அணியை 80 ரன்னில் சுருட்ட வேண்டும். ஒருவேளை இரண்டாவதாக பேட்டிங் செய்யும் பட்சத்தில் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழக்க நேரிடும். இதனால் இன்றைய போட்டியில் ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் வாய்ப்பை பெற முடியும்.