Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : கெத்து காட்டும் சிஎஸ்கே …. புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் ….!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் 8 போட்டிகளில் விளையாடி 2 தோல்வி ,6 வெற்றி என  12 புள்ளிகளை பெற்று  முதலிடத்தில் உள்ளது. 

2021 சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 30 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .இதன் மூலம் புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.

இதையடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 2 -ல் தோல்வி, 6 வெற்றி என 12 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளது .ஆர்சிபி அணி 7 போட்டிகளில் 5 -ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் 4 வெற்றி 4 தோல்வியுடன் 8 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளது.

Categories

Tech |