ஐபில் தொடரில் இன்று நடைபெறும் சென்னை அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ரோகித் சர்மா இமாலய சாதனையை படைக்க காத்திருக்கிறார்.
14 – வது ஐபிஎல் சீசன் இன் இரண்டாவது பாதி ஆட்டம் இன்று முதல் தொடங்குகிறது .இதில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரரும்,மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா சிக்சர் அடிப்பதில் வல்லவர் .களத்தில் சிறிது நேரம் வாணவேடிக்கை நிகழ்த்திவிடுவார்.இந்நிலையில் இன்று நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய சாதனையை படைக்க காத்திருக்கிறார் ரோகித் சர்மா.
இதுவரை ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டியில் 397 சிக்சர்களை அடித்து விளாசியுள்ளார். இந்நிலையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் 3 சிக்சர்களை அடித்து விளாசினால் டி20 கிரிக்கெட் தொடரில் 400 சிக்ஸர்கள் அடித்து விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற இமாலய சாதனையை படைப்பார்.