இந்தியாவில் கொரானா தொற்று எண்ணிக்கை, அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் போட்டியில் ,5 வீரர்கள் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
தற்போது இந்தியாவில் கொரானா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் மக்கள் நோயினால் பாதிக்கப்பட்டு ,உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஐபிஎல் போட்டியில் பங்குபெற்ற, 5 வீரர்கள் தொடரில் இருந்து பாதியில் விலகினர். குறிப்பாக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஆன்ட்ரூ டை, கானே ரிச்சர்ட்சன், ஆடம் சம்பாஆகியோர் தாயகத்துக்கு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் மற்றும் இந்திய வீரர் அஸ்வின் இருவரும் பாதியிலேயே விலகினர்.
இந்நிலையில் தற்போது ஐபிஎல் போட்டியில், இரண்டு அம்பயர்கள் தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த நிதின் மேனன் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பால்ரீபல் இருவரும் , தனிப்பட்ட காரணங்களுக்காக விளக்கியுள்ளனர். இதில் குறிப்பாக நிதின் மேனனின் மனைவிக்கு, கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ,அவர் விலகினார். எனவே தொடரிலிருந்து 2 நடுவர்கள் விலகியதால் ,விரைவில் மாற்று நடுவர்களை கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .