14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 36-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
14-வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 36-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 2 தோல்வி, 7 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது அதேபோல் 8 போட்டிகளில் விளையாடி உள்ள ராஜஸ்தான் அணி 4 வெற்றி, 4 தோல்வி என புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இதில் நடப்பு சீசனில் அமீரகத்தில் தொடங்கிய இரண்டாவது பகுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .இதனால் இன்று நடைபெறும் போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்புடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .இதற்கு முன் இந்தியாவில் நடந்த டெல்லி – ராஜஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .இதனால் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல் பதிலடி கொடுக்கும் வேட்கையுடன் களமிறங்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இப்போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.