14-வது சீசன் ஐபிஎல் தொடரில் துபாயில் நடந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணியை வீழ்த்திய சிஎஸ்கே அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது .ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.
அதன்படி இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு ரூபாய் 20 கோடி பரிசு தொகையாக வழங்கப்பட்டுள்ளது .அதேபோல் 2-வது இடம் பிடித்த கொல்கத்தா அணிக்கு ரூபாய் 12.50 கோடி பரிசு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.